Wednesday, July 20, 2011

சிங்களவரையும் முட்டாளாக்க எத்தனிக்கும் மஹிந்த...!

essayகொழும்பைத் தளமாகக் கொண்ட சண்டே லீடர் ஆங்கில ஊடகத்தில் குசல பெரேரா எழுதியுள்ள அரசியல் பத்தியின் தமிழாக்கம்.


எல்லோரையும் எல்லா நேரத்திலும் ஒருவர் முட்டாளாக்க முடியாது. இங்கு எல்லோரும் என்பது சிங்களவர்களாகவும், ஒருவர் என்பது ராஜபக்ஷவாகவும் இருக்காதுவிடின், எல்லோரையும் எல்லாநேரத்திலும் ஒருவர் முட்டாளாக்கிவிட முடியாது.

இது மஹிந்த சிந்தனையின் தத்துவார்த்தமாகக் காணப்படுகின்றது. மஹிந்த சிந்தனையின் விளைவாக ராஜபக்ஷ தென்னிலங்கை சிங்களவர்களை மீண்டும் முட்டாளாக்க முயற்சிக்கிறார். ஆனால், இலங்கையின் அண்டை நாடுகளை மஹிந்த ராஜபக்ஷவால் முட்டாளாக்கி விட முடியாது.
 
ஏனெனில் மஹிந்த ராஜபக்ஷவின் அரசு மீது பழிசுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் தொடர்பான இராஜதந்திர நகர்வுகளுக்கான ஆதரவுகளைத் திரட்டிக் கொள்வதற்காக பொய்யான வாக்குறுதிகளுடன் மஹிந்த ராஜபக்ஷ டில்லிக்கு எத்தனை தடவைகள் சென்றுள்ளார்கள் என்பது இந்த அயல் நாடுகளுக்கு நன்கு தெரியும்.
 
 
புலம்பெயர்ந்தோரின் அழுத்தம்
 
அதாவது, இலங்கையில் வாழும் தமது தமிழ் உறவுகளுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு முதல், அங்கே இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பான \ரியான பதிலை அளிக்க வேண்டும் என புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் அழுத்தம் கொடுத்து வரும் இந்த நிலையில் மஹிந்த தனக்கான ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான இராஜதந்திர நடவடிக்கை களில் ஈடுபட்டுள்ளார்.
 
இந்த நிலையில் இலங்கையில் தற்போது ஆட்சியிலுள்ள மஹிந்த ராஜபக்ஷ அரசு தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வொன்றை வழங்கு வதைத் தவிர்ப்பதில் தொடர்ந்தும் ஒரே விதமான அணுகு முறையையே கடைப்பிடித்து வருகின்றது.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக மஹிந்த அரசு விட்டுக்கொடுப்பைக் கடைப்பிடித்து அவர்களுக்கு அரசியல் தீர்வொன்று வழங்குவதன் மூலம் அதன் மீது பழி சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர் பான விசாரணைகளின் போது பல அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை மஹிந்த அரசு விளங்கிக் கொள்ளத் தவறிவிட்டது.
 
கற்றுக் கொண்ட பாடங்களுக்கான இணக்கப் பாட்டு  ஆணைக்குழு ஒன்றை இலங்கை ஜனாதிபதி உருவாக்கியிருந்தார். அத்துடன் நிற்காமல், தற்போது பிரேரிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்று தேவையா? ராஜபக்ஷக்களுக்குப் பெரும் அழுத்தங்களைக் கொடுத்துவரும் அனைத்துலக நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் இத்தெரிவுக் குழுவை அங்கீரிக்குமா? எந்தவொரு முடிவுமின்றி இடம்பெறும் பிறிதொரு பேச்சு வார்த்தைக்கு இந்திய அரசு இணக்கம் தெரிவிக்குமா? குறைந்தது அதிபர் மஹிந்தவின் பிறப்பிடத்தில் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ள திட்டத் துக்காகவாவது நாடாளுமன்றத் தெரிவுக்குழு அனுமதி வழங்குமா?

ராஜபக்ஷவின் சுயரூபம்
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரச தரப்பால் அச்சுறுத்தப்பட்டதுடன், அளவெட்டியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின் போது அங்கு உள்நுழைந்த இராணுவ சீருடை தரித்தவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்ட வேளையில், இலங்கையின் பிரதான இரு எதிர்க்கட்சிகளாலும் ராஜபக்ஷ ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்று அழைக்கப்பட்டார். 
 
இலங்கையின் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக் கான அங்கீகாரத்தை தென்னிலங்கையிலுள்ள பிரதான எதிர்க்கட்சி வழங்கியுள்ள நிலையில், பொழுதுபோக்கு வதற்குக் கூடப் பயன்படாத இவ்வாறான கொண் டாட்டங்களை மஹிந்த அரசு மேற்கொள்வதற்கான காரணம் என்ன? இவ்வாறான எதிர் விøளவுகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் ராஜபக்ஷ ஈடுபடுவ தற்கான மிகப் பலமான காரணம் ஒன்று உள்ளது.
 
ஆக்கபூர்வமான அபிவிருத்தி இலங்கையில் இல்லை
 
பிரிட்டன் காலனித்துவத்திலிருந்து 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து இலங்கை  ஆக்க பூர்வமான பொருளாதார அபிவிருத்தித் திட்டம் எதையும் கொண்டிருக்கவில்லை எனபதே அதற்கான காரணமாகும்.
கப்ரல் என்னதான் கூறினாலும், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் வாழ்வோரைத் தவிர ஏனையோர் தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதில் மிகச் சிரமப்படுகின்றனர் என்பதே உண்மை நிலையாகும். நாட்டுப் புறங்களில் வாழும் சிங்கள இளைஞர்களும் இதில் அடங்குகின்றனர்.
 
 மருத்துவம், சட்டம் மற்றும் கணக்கியல் சார் துறைகளை மேம்படுத்தி அவற்றை நவீனமயப் படுத்தி அத்துறைசார் தொழில் வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை இலங்கை அரசு அடையாளம் கண்டுள்ளது என்று  கொழும்பில் இடம்பெற்ற இலங்கையின் 12 ஆவது பொருளாதார உச்சி மாநாட்டில் கருத்துரைத்த போதே இலங்கையின் திறைசேரிச் செயலர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
ஆனால் உண்மையில் இவ்வாறான பாண்டித்தியம் பெற்றவர்கள் கூறுகின்ற பொருளாதார வளர்ச்சி தொடர்பான விடயத்தில் பாரபட்சம் காண்பிக்கப்படுவதுடன், ஊழல் மோசடியும் காணப்படுகின்றது. இவ்வாறான ஊழல் மோசடிகள் மற்றும் பாரபட்சங்கள் மேல்மாகாணத்திலும் இடம்பெற்றுள்ளன என்பது நிரூபணமாகியுள்ளது.
 2009, 2010 காலப் பகுதியில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் வாழும் மக்களின் குடும்ப வருமானம் முறையே ரூபா 51,070 மற்றும் 48,870  ஆகக் காணப்பட்டதாக குடிசன மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் களுத்துறை மாவட்டத்தின் குடும்ப வருமானம் மாதம் ஒன்றுக்கு ரூபா 35,780 ஆகக் காணப்பட்டது. கொழும்புக்கும் களுத்துறைக்கும் இடையிலான மாத வருமான வித்தியாசம் ரூபா 15,000 ஆகக் காணப்படுவதுடன், மாத்தறை  ரூ. 30,980, கேகாலை ரூ. 29342, அம்பாறை  ரூ. 24721, மொனரா கலை  ரூ. 22,161 ஆகவும் மாதம் ஒன்றுக்கான குடும்ப வருமானம் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கிராமப் புறங்களின் பொருளாதாரம் மிகவும் நலிவுற்றே காணப் படுகின்றது. விவசாயத்தை அடிப் படையாகக் கொண்டு வாழும் கிராமப் புறத்து மக்களின் பொருளாதார வளர்ச்சியானது மேல் மாகாணப் பொருளாதாரத்துடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாகக் காணப்படுகின்றது. 
 
மேல் மாகாணத்தில் பெரும் பாலானவர்கள் மாதாந்தச் சம்பளத்தைப் பெறும் தொழில்களில் ஈடுபடுவதே இதற்கான காரணம் என குடிசன மதிப்பீட்டு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஒரு நாட்டு மக்களிடையே பாரபட்சம்
 
இவ்வாறு முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கிடையில் கூட சில பாரபட்சங்கள் காண்பிக்கப்படுகின்றன. இவ்வாறு தனது நாட்டு மக்களுக்கிடையில் பாரபட்சத்தைக் காட்டுகின்ற இலங்கையில், அதன் அரசு எப்போதும் அம்பாந்தோட்டை கப்பல் துறைமுகத் திட்டம், மாத்தளை விமான நிலையத் திட்டம், அனைத்துலக துடுப்பந்தாட்ட அரங்கத் திட்டம் போன்றவையே அதிகம் பேசப்படுகின்றன.
 
இந்தத் திட்டங்களில் பல லஞ்ச ஊழல்களும் இடம்பெற்றுள்ளன. அதாவது எந்தத் திட்டமாயிருந்தாலும் அந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மோசடி செய்வதே இலங்கை அரசின் வழக்கம் என்பதை மஹிந்த அரசு நிரூபித்துள்ளது.
 
பொருளாதாரத் தடைகள் அதிகரித்துவரும் இந்த நிலையில் மக்களை சமாதானப்படுத்துவது என்பது மிகச் சுலபமான காரியம் அல்ல. பேருந்துக்கட்டணங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், மின்சாரம் தொடக்கம் போக்குவரத்துவரை எல்லா விலைகளும் அதிகரித்துள்ளதால், நுகர்வோனின் வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது மாதாந்தச் சம்பள அதிகரிப்பு தொடர்பான நீதியான நியாயமானதொரு பதிலை அரசு வழங்க வேண்டும் எனக் கோரி வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
 
அத்துடன், மஹிந்த அரசானது தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்து டன் தன்னால் எதனையும் சாதிக்க முடியும் என எண்ணி அமுல் படுத்தவிருந்த தனியார் துறை ஊழியர் களுக்கான ஓய்வூதியத் திட்டம், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களின் ஆர்ப்பாட்டப் பேரணிகளுடன் முடிவுக்கு வந்துள்ளது.
 
அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிரான சவால்
சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களின் அரச எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் அரசின் அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிராக எழுந்த சவாலாகும். சிங்கள மனோநிலையை மேலும் வலுப் படுத்துகின்ற ராஜபக்ஷ அரசின் ஒரு முயற்சியாகவே நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைந்துள்ளது. 
 
தமது யுத்த கதாநாயகர்களைத் திருப்திப்படுத்துகின்ற செயற்பாடுகளில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. இலங்கை இராணுவத்தினரால் வெற்றி கொள்ளப்பட்ட இந்த நாட்டில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதா என்பதை அடிப்படையாகக் கொண்டே இந்த விவாதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 13 ஆவது திருத்தச் சட்டமும் அரசியல் மற்றும் இராணுவரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

 (நன்றி: புதினப்பலகை)

இறுதி நேரத்தில் கையை விரித்த தென்னிந்தியப் பாடகர்கள். ஆளுங்கட்சிக்குப் பலத்த அடி

news
கிளிநொச்சியில் ஆளுங்கட்சியினால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின் ஒரு அங்கமாக இடம்பெறவிருந்த இசைநிகழ்ச்சியில் தென்னிந்தியத் திரைப்படப் பாடகர்கள் கலந்து கொள்ளாமல் நிகழ்ச்சியைத் திடீரென இறுதி நேரத்தில் புறக்கணித்துள்ளனர்.
இன்று கிளிநொச்சியில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில்  தனது கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கலந்து கொள்ளவிருந்தார். இந்த தேர்தல் பிரச்சாரத்தை மாபெரும் இசை நிகழ்ச்சியாக நடத்த திட்டமிட்ட ஆளுங்கட்சி தமிழகத்திலிருந்து பாடகர் மனோ, கிரிஷ் மற்றும் சுசித்ரா ஆகியோரைச் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்திருந்தனர். அந்த அழைப்பை ஏற்று அவர்களும் இன்று கொழும்பு வந்திருந்தனர். ஆனால் தமிழக இசைக்கலைஞர்கள் ராஜபக்ஸவின் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள கூடாது என சீமான், நெடுமாறன் போன்றோர் மனோ, கிரிஷ், சுசித்ரா ஆகியோருக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.  நிகழ்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும் என்றும் பாடகர் மனோவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் கொழும்பு விமான நிலையத்தில் இருந்த மூவரும் தமிழின உணர்வாளர்களின் கருத்துக்கு மதிப்பளித்து நிகழ்ச்சியை ரத்து செய்து தமிழகம் திரும்பவுள்ளனர்.

இது தொடர்பாக பாடகர் மனோ தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில் "கிளிநொச்சியில் ஒரு ஸ்டேடியம் திறப்பு விழா என்றே தாங்கள் அழைக்கப்பட்டிருந்ததாகவும் இந்த விழாவையே தேர்தல் பிரச்சாரமாகவும் செய்கிறார்கள் என்பது அங்கு வந்த பின்னர்தான் தெரிந்தது. தமிழ் ஆர்வலர்களும் பெரியவர்களும் கேட்டுக் கொண்டதாலும் நான் நிகழ்சியை ரத்து செய்து விட்டு தமிழகம் திரும்புகிறேன். எமது மக்கள் தமிழ் மக்களுக்கு ஒரு துன்பம் நேரும் போது அந்த நிகழ்வில் கலந்து கொள்ள நான் விரும்பவில்லை" என்று கூறியுள்ளார்.
தென்னிந்தியத் திரைப்படப் பாடகர்கள் மகிந்தரின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தமை குறித்து தமிழ் மக்கள் பெரும் மனவேதனைக்கு உள்ளாகியிருந்தனர். இந் நிலையில் நிகழ்வைப் புறக்கணித்திருப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஆறுதலை வழங்கியுள்ளனர். அவர்களின் புறக்கணிப்பானது ஆளுங்கட்சிக்கு பலத்த அடியுடன் தமிழின உணர்வாளர்களுக்கு பெருவெற்றியையும் தந்திருப்பதாக அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தோனியின் "பேட்' ரூ.72 லட்சம்

லண்டன்: உலக கோப்பை பைனலில் இலங்கைக்கு எதிரான போட்டியில் தோனி பயன்படுத்திய "பேட்' ரூ. 72 லட்சத்துக்கு ஏலம் போனது.
இந்திய அணி கேப்டன் தோனி, கடந்த ஆண்டு "வின்னிங் வேய்ஸ் டுடே பார் டுமாரோ' என்ற பெயரில் அறக்கட்டளை துவங்கினார். இதற்கு நிதி சேர்க்கும் விதத்தில், கடந்த உலக கோப்பை பைனலில், இலங்கைக்கு எதிராக 91 ரன்கள் சேர்க்க உதவிய "பேட்' உட்பட பல பொருட்கள் ஏலம் விடப்பட்டன.
தோனியின் "பேட்' மட்டும் ரூ. 72 லட்சத்துக்கு ஏலம் போனது. தோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பை வென்றது, சிறந்த வீரர் சச்சின் சாதனைகளை குறிக்கும் வகையில், உலகின் பிரபல ஓவியர் சச்சா ஜாப்ரி வரைந்த ஓவியம் ஏலத்தில் விடப்பட்டது.
இதேபோல, முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பாண்டிங், ஆன்ட்ரூ பிளின்டாப், ஆலன் பார்டர், மலிங்கா ஆகியோர் வரைந்த ஓவியம், கையெழுத்திட்ட பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டன. இதன் மூலம் மொத்தம் ரூ. 3.25 கோடி வசூலானது. ஏலம் குறித்து தோனி கூறியது:
எனது அறக்கட்டளை கடந்த ஆண்டு, மார்ச் மாதம் இந்தியாவில் துவங்கப்பட்டது. தற்போதைய ஏலத்தில் கிடைத்துள்ள நிதியை, சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள சிறுவர்களின், கிரிக்கெட் திறனை வளர்க்க பயன்படுத்தப் போகிறேன்.
தவிர, ராஞ்சியில் புதிய விளையாட்டு அகாடமி ஒன்றை துவங்க போகிறேன். இதற்காக ஜார்க்கண்ட் அரசு போதிய நிலத்தை ஏற்கனவே ஒதுக்கியுள்ளது. இதன் மூலம், வசதியில்லாத சிறுவர்களின் திறமைகளை பட்டை தீட்டி, அவர்களது திறமைகளை வெளிப்படுத்த உதவ உள்ளேன்.
இந்த அகாடமியில் பயிலும் மாணவர்கள், ஊழியர்கள் தங்குவதற்கு ஏற்ப, அருகில் வீடு கட்டவும் திட்டமிட்டுள்ளேன்.
என்னுடைய 18 வயதில் (1999-2000) பொதுத்துறை நிறுவனத்தின் சார்பில், 3 பந்துகள், கிரிக்கெட் பேட், பேடுகளை வழங்கியது. இதன் பின் அடுத்த நான்கு ஆண்டில், எனது கிரிக்கெட் திறமையில் வியக்கத்தக்க மாற்றம் ஏற்பட்டது. இவ்வாறு தோனி கூறினார்.
அடுத்த இலக்கு:
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹர்பஜன் சிங் கூறுகையில்,"" சமீபத்தில் நடந்த உலக கோப்பை தொடர் அரையிறுதியில், பாகிஸ்தானை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது, எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட் வீழ்த்தியுள்ளேன். விரைவில் மேலும் 400 விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என்ற நம்பிக்கையுள்ளது,'' என்றார்.
---

சச்சினுக்கு பாரத ரத்னா விருது!

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை இந்தியாவின் மிக உயரிய பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மகென் தெரிவித்துள்ளார். தனியார் தொலைகாட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ரசிகர்கள், வீரர்கள் மற்றும் உலகின் தலை சிறந்த விளையாட்டு வீரர்கள் சச்சினுக்கு சிவிலியன் விருதை தர ஆதரவாக தங்களது கருத்துக்களை ஏற்கனவே வெளிபடுத்தியிருந்தனர். பாரதரத்னா விருது தற்போது கலை, இலக்கியம், அறிவியல் சாதனைகள் மற்றும் பொதுசேவையில் அங்கீகாரம் பெற்றவர்களுக்கே வழங்கபடுவது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.